''உயிருக்கு ஆபத்து.. 250 மிரட்டல்கள் வந்துள்ளன.." ரணில் கைதை வெளிப்படுத்திய யூடியூபர் தகவல்

ரணில் விக்கிரமசிங்க குறித்து தான் கூறிய கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு அழைத்தால், குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு கணிப்பைச் சொல்லிவிட்டு திரும்பி வருவேன் என்று பிரபல யூடியூபர் சுதத் திலக்சிறி கூறியுள்ளார்.

யூடியூப் செனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி ங்கவுக்கு பிணை வழங்கப்படாது என்று கூறிய முதல் நாளிலேயே பொலிஸார் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்றுவிட்டனர்.

தற்போது எனது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொலிஸார் கூறியிருந்தாலும், தற்போது எனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னர் ஐந்து மிரட்டல்களை சந்தித்த எனக்கு இப்போது சுமார் இருநூற்று ஐம்பது மிரட்டல்கள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்